இயக்குநர்களிடம் என் கருத்தை திணிப்பதில்லை - நடிகர் விஜய்சேதுபதி 

Wednesday, September 20, 2017

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'கருப்பன்'. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் பன்னீர் செல்வம்.  

இந்தப் படத்தில் நடித்துள்ளது குறித்து விஜய் சேதுபதி பேசும்போது, 

“ஒரு விலைமாது கதாபாத்திரத்தை கூட மிகவும் கண்ணியமாக ரேனிகுண்டா படத்தில் காட்டியிருப்பார் இயக்குனர் பன்னீர் செல்வம். அதில் துளி கூட கவர்ச்சி இருக்காது. நான் பழகியதில் இது நாள் வரை ஒருவரை பற்றி கூட அவர் குறை சொன்னதில்லை. அவ்வளவு நல்ல மனிதர். அதேபோல, ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி எடுத்து செல்வது என்ற வித்தையை அறிந்தவர் ஏ.எம்.ரத்னம். 

‘கருப்பன்’ படத்துக்கு ரெகுலர் வில்லன் தேவையில்லை, ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்த போது, பாபி சிம்ஹாவிடம் சொன்னேன். அவனும் என் நண்பன் என்பதால் எதுவும் கேட்காமல் நடித்தான். 

‘சங்குத்தேவன்’ படம் டிராப் ஆனது எனக்கு பெரும் வருத்தம். அந்த மாதிரி மீசை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தற்செயலாக அதே இடத்தில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் நிஜமாகவே மாடு பிடிக்கவில்லை. நிஜமான மாடுபிடி வீரர்களின் காட்சிகளோடு அழகாக மேட்ச் செய்து சிறப்பாக எடுத்துள்ளார் ராஜசேகர் மாஸ்டர். என் கருத்தை எந்த இயக்குனரிடம் நான் திணிப்பதில்லை. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு சூழல் இருக்கும். அதனால் அவர்கள் இயக்குநரிடம் கதை கேட்காமல் போயிருக்கலாம். அதை நாம் குறையாக சொல்ல முடியாது. விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது!” என்றார்

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles