சினேகனுடன் ஜோடி சேருகிறாரா ஓவியா?

Wednesday, November 15, 2017

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினால் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஓவியா.

அவருக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் அவரது பெயரிலேயே பெரிய ரசிகர்கள் கூட்டம் ‘ஓவியா ஆர்மி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ஹிட்டடித்தது. விளம்பரப் படங்கள், திரைப்படங்களில் ஓவியாவை ஒப்பந்தம் செய்ய, தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். இந்நிலையில், அதே நிகழ்ச்சியில், இறுதியில் வெளியேறிய பாடலாசிரியர் சினேகன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாராம் ஓவியா. இந்தப் படத்தை இசையமைப்பாளர் சத்யா தயாரிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், சினேகனுடன் ஓவியா ஜோடி சேரவில்லை என்ற தகவலும் மீடியாக்களில் றெக்கை கட்டி பறந்துகொண்டிருக்கிறது. எது நிஜம்? என்பது பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles