பேய்ப் பட ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் 'அவள்'!

Monday, October 9, 2017

'Etaki Entertainment' மற்றும்  'Viacom 18 Motion Pictures'  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அவள்’. இப்படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மிலிண்ட் ராவ், இப்படத்தை எழுதி, இயக்குகிறார். 

உறையவைக்கும் பேய் கதையாம் ‘அவள்’. சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதே அதற்கு சான்று. இந்த டீஸர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும்  இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்பட உள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக உண்மையான பேய் படங்களை விட, காமெடி பேய் படங்களே அதிகம் வரவேற்பை பெற்றன. இதனால், தமிழ் சினிமாவில் பேய் படம் பார்க்கும் போது வரும் அச்ச உணர்வு கூட தகர்ந்து விட்டது. இந்நிலையில், “உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு 'அவள்' படம் விருந்து படைக்கும். சினிமா பார்வையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும்” என்கின்றனர் படக்குழுவினர். ‘அவள்’ படம் அதைச் செய்யும் என நம்புவோமாக!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles