இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’

Tuesday, September 12, 2017

ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணாதுரை’. இப்படத்தின் கதையை எழுதி, இயக்குபவர் ஸ்ரீனிவாசன். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 

 

“படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்களுக்கான ஷுட்டிங் மட்டும் மீதமிருப்பதாக” படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. அண்மையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினரை  வாழ்த்தியது, படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

பொதுவாக, தான் தயாரித்து நடிக்கும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார் விஜய் ஆண்டனி. அது இப்படத்திலும் தொடர்கிறதாம். ஒவ்வொரு படத்திலும் அவரின் கிராஃப் எகிறிக்கொண்டே போவதற்கு திட்டமிடலும், கடின உழைப்புமே காரணம் என்கிறது கோலிவுட் பட்சி. உண்மைதானே!

 

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles