என் சினிமா கேரியரில் ஸ்டைலிஷான படம் ‘துப்பறிவாளன்’- நடிகர் விஷால் 

Friday, September 8, 2017

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’.  இப்படத்தில் பிரசன்னா, வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட ஐந்து பேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் நடித்துள்ளது பற்றி விஷால் கூறும்போது, 

“டிடெக்டிவ் ஜானர் படம் ‘துப்பறிவாளன்’. என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் படமும் இதுதான். படத்துக்கு பாடல்கள் தேவை இல்லை. இப்போது மக்கள் பாடல்களே இல்லாமல் வெளிவரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள். அத்தகைய ரசிகர்களுக்கு ‘துப்பறிவாளன்’ விருந்தாக இருக்கும். சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படமாகவும் இது பேசப்படும். 

மிஷ்கினுக்கு என்னுடைய உடல் மொழி, ஸ்டைல் என்று அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று ஆசை. அதனால், அவருடைய ஸ்டைல் கண்ணாடி மாட்டி நடித்துள்ளேன். படத்தில் இடம்பெறும், சைனீஸ் ஹோட்டல் சண்டை காட்சி ரசிகர்களை மிரட்டும். வியட்நாமிலிருந்து சண்டை கலைஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஏழு பேரோடு அடுத்தடுத்து சண்டை போட்டது புதுமையாக இருந்தது. சண்டை காட்சிகள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பேப்பரில் வரைந்து வடிவமைத்தவர் இயக்குநர் மிஷ்கின் தான். படத்தில் பாக்யராஜ் சாரை நீங்கள் மூன்றாவது ஷாட்டில் தான் கண்டுபிடிப்பீர்கள். அவர் இதுவரை பண்ணாத புதுமையான ஒரு நெகடிவ் ரோலை செய்துள்ளார். துப்பறிவாளனில் கடைசி 20 நிமிடம் மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles