‘ஓட்டுக்கு பணம் தரும் பாணி’யை சாடும் தப்பு தண்டா!

Wednesday, September 6, 2017

தமிழ் சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா. அவரிடம் சினிமா பாடம் பயின்றவர் ஸ்ரீகண்டன். தற்போது அவர், இயக்கியுள்ள படம் 'தப்பு தண்டா'. இப்படத்தில் சத்யா, ஸ்வேதா கய், உதயா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் மைம் கோபி, அஜய் கோஷ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீகண்டன் கூறும்போது, 

“தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர் தான் ‘தப்பு தண்டா’. இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது. ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும் களப்பணியும் தேவைப்பட்டது. அது இல்லாவிட்டால் இவ்வாறான ஒரு  தேர்தல் பிரச்சாரம் கதைக்கு வலு இருக்காது. நாங்கள் இப்படத்தில் கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். சினிமா ரசிகர்கள் 'தப்பு தாண்டா' படத்தை திரையரங்கங்களில் ரசித்து கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன்” என்றார். 

செப்டம்பர் 8 ஆம் தேதி ‘தப்பு தண்டா’ படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக் 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles