படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை!

Tuesday, September 5, 2017

 இப்படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாகவும் பியா பாஜ்பாய் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மதன் கார்கியின் பாடல் வரிகளுக்கு தரண் இசையமைக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் பி.ஆர்.விஜயலட்சுமி.

இப்படம் குறித்து நாயகி பியா பாஜ்பாய் பேசும்போது, 

“அபியும் அனுவும் படத்தையும் அதில் எனக்கு கிடைத்துள்ள கதாபாத்திரத்தையும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். படத்தின் இயக்குநர் விஜயலட்சுமி அவர்கள் எனக்கு போன் பண்ணி, இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற பாத்திரம் கிடைப்பது அரிது. இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டும் என்று இருந்தது. கதைக்கேற்ப நானும் மொட்டை அடித்துக்கொண்டேன். என்னுடைய தோற்றத்தையும் மீறி நல்ல நடிகை என்று பெயர் வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி செய்தேன்!

நாயகன் டோவினோ தோமஸுடன் இது எனக்கு முதல் படம். அபாரமான நடிப்பு திறமையை கொண்டவர் அவர். அவரது தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ‘அபியும் அனுவும்’ போஸ்டரை வெளியிட்டு, பிரபலப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸு அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ள'அபியும் அனுவும்' படத்தை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் 'அபியும் அனுவும்' இடம்பெறும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles