நிக்கி கல்ரானியின் காஸ்ட்யூம்தான் இப்போ ட்ரெண்ட் செட்டர் - காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

Friday, September 1, 2017

“நடிகர் விக்ரம் பிரபு உயரமான, வாட்ட சாட்டமான ஆளு. அவரு பெர்சனாலிட்டிக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் ரொம்ப நல்லா  இருக்கும். அவருக்கு ‘வீர சிவாஜி’ படத்துல காஸ்ட்யூம் டிஸைனராக  பணியாற்றி இருக்கேன். “இப்போ, பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ தயாரிப்புல வெளிவரப் போகும் ‘நெருப்புடா’ படத்திலேயும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

“இந்தப் படத்துல விக்ரம் பிரபு ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாரு”ன்னு  பிரபு சார் சொல்லியிருக்காரு.  அதை கேட்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. ஏன்னா, நான் பிரபு சாரோட ரசிகை!” சிரிப்பும், சந்தோஷமாகப் பேசுகிறார் அம்ரிதா ராம். கோலிவுட்டின் பரபரப்பான காஸ்ட்யூம் டிசைனர் உடனான சந்திப்பிலிருந்து..

‘நெருப்புடா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து?

“கதை கேட்கும்பொழுதே, எனக்கு ரொம்ப புதுசாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. சவாலான பல விஷயங்கள் படத்தில் இருக்கும்னு தோணிச்சு. இந்திய சினிமா உலகமே கொண்டாடும் சிவாஜி சாரோட பேரனின் தயாரிப்பு நிறுவனத்துல பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இயக்குநர் அசோக் குமாரோட ஐடியாவும் என்னோட கிரியேட்டிவிட்டியும் சேர்த்து காஸ்ட்யூமில் கலக்கியிருக்கிறோம்!”

தீயணைப்பு வீரர் வாழ்வை மையமாகக் கொண்ட படம் என்பதால், ஆடை வடிவமைப்பு சவால் நிறைந்ததாக இருந்திருக்குமே?

“படத்தில் தீ காட்சிகள் அதிகம் என்பதால் இயக்குநர், ஒளிப்பதிவாளரோடு டிஸ்கஸ் பண்ணி, அவங்க சொல்றதுக்கு ஏற்ற மாதிரி டிசைன் செய்தேன். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சாரை திருப்தி படுத்துறது ரொம்ப கஷ்டமான விஷயம். நெருப்பு சம்பந்தப்பட்ட படம் என்பதால் காஸ்ட்யூம்களுக்கான நிறங்களை தேர்வு செய்யும்போது ரொம்ப உஷாரா இருக்கணும். அப்படியாக, நான் தேர்ந்தெடுத்த காஸ்ட்யூம்களை அவர் ரொம்பவே ரசித்து, பாராட்டினார்!. ‘நெருப்புடா’ படமுன்னு இல்லை; நான் பணியாற்றும் ஒவ்வொரு படமும் எனக்கு தனித்துவமாகத்தான் இருக்கணும்ன்னு நினைப்பேன். அந்த வகையில ‘நெருப்புடா’ படம் எனக்கு சவாலாக அமைஞ்சது!”

நிக்கி கல்ரானி காஸ்ட்யூமில் என்ன ஸ்பெஷல்?

“நிக்கி கல்ரானியை கவர்ச்சியாக இல்லாமல் மாடர்னாக காட்டணும்னு  நினைச்சேன். அவங்க லாங் ஸ்கர்ட்தான் போட்டுகிட்டு வர்றாங்க. அதற்கு மேட்சாக ப்ளாக் பிரிண்டட் டாப்ஸ் தான் கொடுத்தேன். படம் முழுக்க அவங்க போட்டுட்டு வர்ற பிளாக் மெட்டல் ஜுவெல்லரிதான் இப்போ ட்ரெண்ட் செட்டர்!”

படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளாரே. அவருக்கென்று விசேஷமாக கவனம் எடுத்துக்கொண்டீர்களா?

“ராஜேந்திரன் சாரோட மிகப் பெரிய விசிறி நான். இந்தப் படத்துல அவருக்கான காஸ்ட்யூம் ஸ்ட்ரக்சரிங்தான் நான் செஞ்சேன். ஆனால் முழுமையாக டிஸைன் பண்ணினது ரங்கசாமி அண்ணன்தான். படத்துல ராஜேந்திரன் ரொம்ப ஸ்பெஷலா தெரிவாரு!”

நூறு சதவீதம் பொருந்திப்போகிற ஆடை அமைந்த விக்ரம் பிரபு படம் என்று எதைச் சொல்வீர்கள்?

“யானைப் பாகனாக ‘கும்கி’ திரைப்படத்துல விக்ரம் பிரபு நடிச்சிருப்பாரு. அதுக்கு காண்ட்ராஸ்ட்டா ‘அரிமா நம்பி’ திரைப்படத்துல அவரு ரொம்ப ஸ்டைலிஷா வருவாரு. ரெண்டுமே அவருக்கு கச்சிதமாக இருக்கும்.  ஏன்னா அவரோட பெர்சனாலிட்டி அப்படி. அவருக்கு, பேஷன் பற்றி நிறைய தெரிஞ்சாலும், நம்ம வேலையில தலையிட மாட்டாரு. அதோட, ரொம்ப முக்கியமா, எந்தெந்த ஆடை அவருக்கு எப்படி இருக்கும்னு தெரியும். அதுனால அவருக்கு பொருந்தாத எதையுமே நாம அவருக்கு கொடுக்க முடியாது!” நச்சென்று முடித்தார்.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles