காட்டையும் காற்றையும் காக்கப் போராடும் ‘மரகதக்காடு’!

Friday, October 27, 2017

ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ள படம் ‘மரகதக்காடு’. இப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் மங்களேஷ்வரன்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது,

“அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம் தான் ‘மரகதக்காடு’. காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. படம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை. 

படம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். 

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக்குறையாகப் போகுதுனு கவலை இல்லாம இருக்கோம். அதுகுறித்து கவலைப்பட்டிருக்கும் படம் தான் ’மரகதக்காடு’ என்றார்.

தற்போது, படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது. 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles