மாற்றுத்திறன் கலைஞர்களால் உருவாகும் '5 ஜி'!

Friday, October 27, 2017

பிலிம் இன்டஸ்டிரி டிப்ரன்லி ஏபில்டு ஆர்டிஸ்ட் வெல்பேர் அசோசியேஷன் தயாரிக்கும் படம் '5 ஜி'.  இதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் பிறந்த மாற்றுத்திறன் கலைஞர் கே.பி.ராஜபாலாஜி இந்தப் படத்தினை இயக்க உள்ளார். 

உலக மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து மனித நேயத்தை உருவாக்கவே இப்படம் உருவாகப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழ் திரையுலக நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் தங்களின் மனிதநேயத்தை வெளிபடுத்த இப்படத்தில் பணியாற்ற உள்ளனர். படம் பற்றிய முழு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். உலக மாற்றுத்திறனாளிகளின் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி இந்த திரைப்படம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles