விமலுக்கு கைகொடுக்குமா ‘மன்னர் வகையறா’ 

Wednesday, October 25, 2017

ஏ3வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் விமல் தயாரித்து, நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

மேலும், பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தில்  ரோபோ சங்கர்  - விமல் புதிய கூட்டணி படத்துக்கு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார்  பூபதி பாண்டியன்.

‘மன்னர் வகையறா’வின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நவம்பர்-8 ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

வரும் புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலுக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles