பிரம்மாண்ட நிகழ்வுக்கு தயாராகிறது ‘2.0’ இசை வெளியீடு நிகழ்ச்சி!

Tuesday, October 24, 2017

லைகா புரோடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘2.0’. இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் ‘2.0’ படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், படக்குழுவினர் மேலும் படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். 

வரும் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய  படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு  7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab   செல்கின்றனர். அங்கு உலகளாவிய ‘2.0’ படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி 27 ஆம் தேதி நடைபெறும்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ‘2.0’ படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக, அவர் இசையமைக்கவுள்ளார். பாஸ்கோ நடனக்குழு பாடல்களுக்கு சிறப்பு நடன விருந்து அளிக்கவுள்ளனர். 12,000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் LED போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles