வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் - இயக்குநர் சுசீந்திரன்

Tuesday, October 24, 2017

அன்னை பிலிம் பேக்டரி தயாரித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் சுசீந்திரன். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. 

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, - 

“எனக்கு ‘நான் மகான் அல்ல’ படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்தப் படமும் வெற்றி படமாக அமையும். ‘பாண்டிய நாடு’ போலவே இதிலும் அனைத்து பாடல்களும்  ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன், ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ‘ஜீவா’ திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். அந்தப் படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில்  Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஆரம்பித்தேன். ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிகச் சிறந்த நடிகனை இந்தப் படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles