குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் 'கலகலப்பு 2'!

Monday, October 23, 2017

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் படம் 'கலகலப்பு 2'. இப்படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் சுந்தர்.சி. படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர்.

அக்டோபர் 4 ஆம் தேதி, 'கலகலப்பு 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'கலகலப்பு' படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles