விஜய் மில்டன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ்மேனன்!

Friday, October 20, 2017

'Rough Note' நிறுவனம் தயாரிக்கும் படம் 'கோலிசோடா 2'. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பரத் சீனி, வினோத் , பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, செம்பன் ஜோஷ், ஸ்டன்ட் ஷிவா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன் தோன்றுகிறார். அண்மையில், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் விஜய் மில்டன். 

அது குறித்து இயக்குநர் பேசும்போது, 

“நான் இந்த கதையை எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ்மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும்  கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் அவரிடம்  சொன்னபொழுது, சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும்  குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் பாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. நான் நினைத்ததை விட மேலும் சிறப்பாக ‘கோலி சோடா 2’ உருவாகிவருகிறது” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles