‘பாகுபலி’ போன்று பழிவாங்கும் கதையா ‘கர்ஜனை’?

Friday, October 20, 2017

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக ஜோன்ஸ் தயாரித்துள்ள படம் 'கர்ஜனை'. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் சுந்தர் பாலு. காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதை, ஆக்‌ஷன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. 

“ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கோபம், எப்படி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது என்பதை மையமாக வைத்து, படத்தை இயக்கியுள்ளேன். இது ‘பாகுபலி’ படம் போன்று பழிவாங்கும் கதையாக இருக்கும். பிரச்னைகள்தான் இடம் மாறியிருக்கின்றன!” என்கிறார் இயக்குநர். இப்படத்தின் மோஷன் போஸ்டரை அண்மையில் நடிகர் கார்த்தி, வெளியிட்டார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles