கிரிக்கெட் வீரர் தோனி ரசிகராக நடிக்கும் விக்ரம் பிரபு!

Friday, October 6, 2017

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் ஜி.சிவகுமார் தயாரிக்கும் படம் 'பக்கா'. படத்தின் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கின்றனர்.

மேலும், சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஷி.ஷி.சூர்யா.

படம் பற்றி விக்ரம்பிரபு கூறும்போது, 

“திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.

ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா (நிக்கி கல்ராணி) கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி) இப்படி எங்கள் மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான ‘பக்கா’ படம்.

நம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக ‘பக்கா’ இருக்கும். இதுவரை நான் ஏற்காத யதார்த்தமான பாத்திரம் எனக்கு புதிய பரிணாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும். கமர்ஷியலுடன் கூடிய காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles