காதலையே மையமாக கொண்டு வரவிருக்கும் 100% காதல்!

Monday, October 16, 2017

கிரியேட்டிவ் சினிமாஸ் மற்றும் என்.ஜே என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘100% காதல்’. படத்தின் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் எம். எம். சந்திரமௌலி. அதிரடி, மர்மம், வன்மம் என துரோகங்களும் வன்முறைகளும் நிறைந்த படங்களே, தற்போது கோலிவுட்டை ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன.

இந்நேரத்தில், முற்றிலும் காதலையே மையமாக கொண்டு ‘100% காதல்’ படம் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக மட்டுமல்லாமல் இப்படத்திற்கான இசை அமைப்பையும் சேர்த்து கவனிக்கிறார்.  படப்பிடிப்பு, சென்னையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. சில காட்சிகளை  அமைப்புகளை வெளிநாட்டிலும் படம்பிடிக்க இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles