அசுர வளர்ச்சியை நோக்கி நகர்கிறாரா விஜய் சேதுபதி?

Monday, October 16, 2017

 '7c's Entertainment Private Limited'  தயாரிக்கும் படம் ஒ"ரு நல்ல நாள் பாத்து சொல்றேன்". இப்படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் கூட்டாக நடிக்கின்றனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஆறுமுக குமார்.  படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. 

பொதுவாக, ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும்  படங்களே அத்தகையப் படங்களாக  இருக்கும். அந்த வரிசையில் இந்தப் படமும் இடம்பிடித்துள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வாங்க, கடும் போட்டி நடப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சியும், கௌதம் கார்த்திக்கின் வெற்றி பயணமும் தான்  காரணம்  என கூறப்படுகிறது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles