மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா!

Saturday, October 14, 2017

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. பின்னர், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியாக புரமோஷன் ஆனார்.

பின்னர் மீண்டும் கோலிவுட்டுக்குள் களமிறங்கி ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘மதுமதி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டினார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்தன் மூலம் மிகப் பிரபலமானார். அதற்குப் பிறகு திருமணமாகி செட்டிலாகி விட்டார். பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிப்பு பிரவேசம் செய்ய உள்ளார். 

இது குறித்து சித்ரா பேசும்போது, 

என்னுடைய மகளை வளர்க்க வேண்டியிருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது என் மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்!” என்றார். கோலிவுட் உதவி இயக்குநர்கள் கவனிக்கவும்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles