ரஜினியின் மிகப் பெரிய ரசிகன் நான்! - கபாலி செல்வா

Saturday, October 14, 2017

ஜெயில் 'பரோல்' என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள  படம் '12-12-1950'. இப்படத்தில் நாயகனாக நடித்து, இயக்கியுள்ளவர் கபாலி செல்வா.

ஜெயில் தண்டனையில் இருக்கும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர்,  ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண பரோலில் வர ஆசைப்பட்டு,  எப்படி வந்தார், படத்தின் முதல் கட்சியை பார்த்தாரா? இல்லையா? என்பது தான் இந்த காமெடி கலந்த ஜனரஞ்சகமான படத்தின் கதை.  இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் பற்றி கபாலி செல்வா கூறும்போது, 

“ஒரு வருடம் முன்பு, செய்தித்தாள் ஒன்றில் பரோலில் வந்த ஒரு சிறை கைதி பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்றினை படித்தேன். அது தான்   படத்தின் கதை உருவாக காரணமாக இருந்தது. ரஜினி சாரின் மிக பெரிய ரசிகன் நான். ஆகவே, அவரது பிறந்த நாளையே தலைப்பாக வைத்துவிட்டேன். படத்தில் காமெடி, எமோஷன்ஸ் மற்றும் கலகலப்பை சரியான கலவையில் அமைத்துள்ளேன். ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்!” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles