மூன்று பாட்டிகளின் கதைதான் ‘இட்லி’!

Thursday, October 12, 2017

அப்பு மூவீஸ் சார்பில் தூயவன் தயாரிக்கும் படம் இட்லி. படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் வித்யாதரன். அண்மையில், இப்படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் கார்த்தி.

இதில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பான உள்ளிட்ட மூவரும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறஆடை மூர்த்தி உள்ளிட்டோரும் உடன் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள ‘இட்லி’!

இப்படம் குறித்து இயக்குநர் கூறும்போது, 

“வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள் தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. படத்தின் பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இது தான் ‘இட்லி’ படத்தின் ஸ்பெஷல். இது அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். 

நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது, “நாங்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என்று  கேட்டார். படபிடிப்பில் அந்த காட்சியில் நடிக்கும் போது கூட நடிகைகள் மூவருக்கும் சந்தேகம் இருந்தது. நடித்து, முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போதுதான் அனைவருக்கும் மனநிறைவே வந்தது!” என்றார் வித்யாதரன். ‘இட்லி’ படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles