இரு தேசிய விருது இயக்குநர்கள் இணையும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'! 

Wednesday, October 11, 2017

 'Creative Entertainers and Distributors'  நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் படம் மிஸ்டர் சந்திரமௌலி. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் ரெஜினா கஸ்ஸான்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ் நடிக்கவுள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர்களான மகேந்திரனும், அகத்தியனும்  மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“‘மிஸ்டர் சந்திரமௌலி’யில் அமைந்துள்ள நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து, அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குநர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு  பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்தப் படத்தை மிக  பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles