தயாரிப்பாளர் அவதாரத்தில் நீலிமா!

Tuesday, October 10, 2017

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நெடுந்தொடரிலும் கலக்கி வருபவர் நடிகை நீலிமா.  'நான் மகான் அல்ல', 'முரண்', 'திமிரு', 'சந்தோஷ் சுப்ரமண்யம்', 'மொழி' 'பண்ணையாரும் பத்மினியும்', 'சத்ரு', 'மன்னர் வகையறா' உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் 'வாணி ராணி', 'தாமரை', 'தலையனை பூக்கள்' உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘நிறம் மாறாத பூக்கள்’ எனும் தொடரை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். 

இது குறித்து நீலிமா கூறும்போது, 

“எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்!” என்றார். 

‘நிறம் மாறாத பூக்கள்’ தொடரை இனியன் தினேஷ் இயக்க, தனது கணவர் இசைவாணன் உடன் இணைந்து இசை பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கிறார் நீலிமா. இத்தொடரில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா ஆகிய மூவரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, கௌதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் உடன் நடிக்கிறார்கள். மும்முனை காதல் கதையாக உருவாகிறது ‘நிறம் மாறாத பூக்கள்’. படப்பிடிப்பு நாகர்கோவில் முட்டம், கன்யாகுமரி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles