முழு காமெடி கலாட்டா படம் 'ஜெயிக்கிற குதிர'!     

Tuesday, October 10, 2017

சினிமா பாரடைஸ், சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'ஜெயிக்கிறகுதிர'. இப்படத்தில் ஜீவன் நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும், ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி. கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஷக்தி என்.சிதம்பரம். 

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அனைத்து அம்சங்களும் இருந்தால்தான் படம் நல்ல வரவேற்பை பெரும். அப்படியான அனைத்தும் உள்ள படம் தான் இந்த 'ஜெயிக்கிறகுதிர'. படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும்.  படம் விரைவில் வெளியாக உள்ளது” என்றார். இப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது! 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles