சந்தானத்தின் பாடலுக்காக இணைந்த ஐந்து நடனக் கலைஞர்கள்!

Tuesday, October 10, 2017

வி.டி.வி. கணேஷ் தயாரிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படத்தில் அவர் அறிமுகமாகும் பாடலான ‘கலக்கு மச்சா டவுளத்துள’ அண்மையில் படமாக்கபட்டது.

இந்தப் பாடலுக்கு எஸ்.டி.ஆர். இசையமைக்க, ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த காட்சியை முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இப்படத்தை நி.லி.சேதுராமன் இயக்கியுள்ளார். 

இப்படத்தில் விவேக், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மேலும் சம்பத் ராஜ் , ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். படத்தின் பிரமாண்டமான இசை விழா நவம்பர் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெறவுள்ளது. 'சக்க போடு போடு ராஜா' படம் நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

- கிராபியென் ப்ளாக் 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles