நடிகர் ஜெய் நடித்துள்ள 'பலூன்' படத்துக்கு யு/ஏ!

Tuesday, October 10, 2017

70 எம்எம் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பலூன்’. இப்படத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் சினிஷ்.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல் தணிக்கைக் குழு அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து இயக்குனர் சினிஷ் பேசும்போது,  

“ ‘பலூன்’ படத்தை சிறப்பாக இயக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதால் எந்த விட கட்டும் இல்லாமல் படத்தை வெளிகொண்டுவருவதில் முனைப்பு காட்டினேன். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் எந்த விட கட்டும் இன்றி யு/ஏ சான்றிதழ் வழங்கினர். எல்லா வேலைகளும் முடிந்து 'பலூன்' ரிலீசுக்கு தயாராக உள்ளது. மிக  விரைவில் ரிலீஸ் செய்யப்படும்” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles