‘ஜெய்’யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் பலம் - தயாரிப்பாளர் நிதின் சத்யா

Friday, October 6, 2017

தமிழ் சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அவதாரம் எடுப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார் நிதின் சத்யா. ‘சென்னை 28’ படத்தின் மூலமாக எல்லோரின் மனதிலும் இடம்பிடித்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து, தன்னுடைய திறமையை காட்டினார்.

தற்போது, இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவியாளரான பிச்சுமணியை வைத்து பெயரிடப்படாத படம் ஒன்றை தயாரிக்கிறார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு  'SHVEDH'  பெயரிட்டுள்ளார். 

தன்னுடைய புதிய அவதாரம் குறித்து அவர் பேசும்போது, 

“தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனேயே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பார் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். 

முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக வந்துள்ளது. ஜெய்யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரும் பலமாக உள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் மற்றும்  படத்தின் தலைப்பு மிக விரைவில் அறிவிப்போம்!” என்றார். 

பெயரிப்படாத இப்படத்தை நிதின் சத்யாவுடன் இணைந்து அவரது நண்பர் பத்ரி கஸ்துரியும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles