பாத்திரத்துக்காக தன் நிறத்தை மாற்றிய நடிகர்!

Friday, October 6, 2017

தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல்களை மையமாக கொண்டு வெளிவந்த படம் ‘களவு தொழிற்சாலை’. இப்படத்தை வி.நி.ரி என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்க, டி.கிருஷ்ணகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்து பலராலும் பாராட்டப் பெற்றார் நடிகர் மு.களஞ்சியம். 

படத்தில் தன்னுடைய பாத்திரம் பற்றி அவர் கூறும்போது, 

“படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்துள்ளேன்.

இர்பான் என்கிற இஸ்லாமிய அதிகாரி, இந்து மத கடவுள் சிலைகளை கடத்துவதை உயிரை பணையம் வைத்து தடுத்து நிறுத்துகிறார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பாத்திரம் அது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க தடையாக இருந்தது எனது நிறம்.  “உங்களது நிறத்தை கொஞ்சம் வெளுப்பாக மாற்றி ஓர் இஸ்லாமியர் போல தோற்றத்தை கொண்டு வந்தால் நீங்கள் நடிக்கலாம், முடியுமா?” என்று இயக்குநர் என்னிடம்  கேட்டார். 

அதை ஏற்று எனது நிறத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். சென்னையில் பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரின் தலைமை மருத்துவர் கார்த்திக்கை உதவியோடு நிறத்தை மாற்றினேன். இதற்கு பல லட்சம் ரூபாய் செலவானது. நான் இர்பான் பாத்திரமாக மாறி, இயக்குநர் முன்னால் நின்றேன். அவரால் நம்ப முடியவில்லை. அசந்து போனார். எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பரிசாக படத்தில் நடிக்கிற வாய்ப்பை எனக்கு அளித்தார். படத்தில் என்னுடைய பாத்திரம் குறித்து அனைவரும் பாராட்டும்போது மகிழ்ச்சியாக உள்ளது!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles