'அபியும் அனுவும்' புற்றுநோய் கதையல்ல!

Friday, October 6, 2017

பியா பாஜ்பாய், டோவினோ தாமஸ் ஜோடி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘அபியும் அனுவும்’. படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலட்சுமி. 

இப்படம் குறித்து இயக்குநர் பேசுகையில்,

“பொதுவாக ‘அபியும் அனுவும்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதையை சொல்ல, பலரும் யோசிப்பார்கள். லத்தீன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதினேன். வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் காதலர்கள் சந்திக்கும் சவால்கள், அதில் சமூக ஊடகங்களின் பங்கு உள்ளிட்ட விஷயங்களை விரிவாக சொல்லியிருக்கிறேன். சிலர் நினைப்பது போல் ‘அபியும் அனுவும்’ கதை புற்றுநோயை பற்றியதல்ல. இக்கதைக்கும் புற்றுநோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 

மிகச் சிறந்த நடிப்பினை இந்தப் படத்தில் பியா பாஜ்பாய் தந்துள்ளார். பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் நாயகன் டோவினோ தாமஸ். இவர் போன்ற ஒரு திறமைசாலியை தமிழ் சினிமாவிற்கு இப்படம் மூலம் அறிமுகம் செய்வதில் எனக்கு பெருமை!” என்றார். 

அண்மையில் பெண் இயக்குநர்கள் கோலிவுட்டில் தொடர்ச்சியாக படம் இயக்கி, சாதனை படைக்கின்றனர். அந்த வரிசையில் விஜயலட்சுமியும் இடம் பிடிப்பார் என்று நம்புவோமாக!

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles