மோகன்பாபுவின் மகன் தமிழில் அறிமுகமாகும் படம் ‘குறள் 388’

Thursday, October 5, 2017

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஷ்ணு மஞ்சு. இவர் மறைந்த நடிகரான மோகன்பாபுவின் மகன் ஆவார். தமிழில் முதன் முறையாக இவர் அறிமுகமாகும் படம் ‘குறள் 388’. படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.

மேலும், சம்பத் ராஜ், நாசர், பிரகதி, முனீஸ்காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் நி.ஷி.கார்த்தி.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப் படாத கருத்துக்கள் எதுவும் இல்லை. “முறை செய்து காப்பாற்றும் மன்னவன்  மக்கட்கு  இறையென்று வைக்கப் படும்” என்ற 388 வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதை. இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இது இருக்கும்!” என்றார்.

இப்படம் தெலுங்கில் "வோட்டர்" என்ற பெயரில் வெளியாகிறது. படத்தை ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.

 

- கிராபியென் ப்ளாக்   

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles