விஜய் சேதுபதி சாயிஷா சாய்கல் இணையும் ‘ஜுங்கா’!

Thursday, October 5, 2017

இயக்குநர் கோகுல் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ஜுங்கா. இதில் சாயிஷா சாய்கல் நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கும் சித்தார்த் விபின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.விஜய் சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே ஜுங்கா மிகப் பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடியும் முன்னரே படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது. படத்தின் பூஜை சமயத்திலேயே வியாபாரங்கள் தொடங்குவது இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் உரிமையை ஏ அன்ட் பி குரூப்ஸ் மிகப்பெரிய விலைகொடுத்து வாங்கியுள்ளது கோலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜுங்கா படத்தை விஜய் சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின்எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles