போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் பரத்!

Thursday, October 5, 2017

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப்படத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார்  ஸ்ரீசெந்தில். 

படம் குறித்து இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூறும்போது, 

“சஸ்பென்ஸ் த்ரில்லரான படத்தில் பரத், முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்”’ என்றார்.

ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ், பாலசுப்ரமணியெம் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் பாலா, இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles