ஆணவக் கொலைகளை தோலுரிக்கும் ‘களிறு’!

Thursday, October 5, 2017

சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ சார்பில் விஷ்வக், அ.இனியவன் தயாரித்துள்ள படம் ‘களிறு’. படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஜி.ஜெ. சத்யா! 

படம் பற்றி இயக்குநர் பேசும்போது,

“நாட்டில் இன்று நிலவுகிற சமுதாயச் சூழலை முடிந்தவரை நேர்மையாகப் பதிவு செய்கிற ஒரு முயற்சியே ‘களிறு’ படம். நம்முடைய நாட்டில் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் காதலித்து, கலப்புத் திருமணம் செய்தால், அது மிகப்பெரிய சமூகக் குற்றம் என்பதுபோல் பார்க்கப்படுகிறது. இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்கார்ந்து பேசினால் அந்தக் காதலர்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். 

வீட்டோடு முடிய வேண்டிய பிரச்சினைகளை போலி அரசியல்வாதிகள், ஊதிப் பெரிதாக்கிவிடுகிறார்கள். பின் அதனை நாட்டுப் பிரச்சினையாக்கி எப்படிக் குளிர் காய்கிறார்கள் என்பதை இப்படத்தில் விரிவாக சொல்லியிருக்கிறேன். ஆணவக் கொலைகளால் இழப்பும் வலியும் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவானது என்பதை அழுத்தமாக சொல்லும் படமாகவும் ‘களிறு’ இருக்கும்!” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles