வாழ்வியல் பதிவா ‘களத்தூர் கிராமம்’?

Tuesday, October 3, 2017

கி.ஸி. மூவி பாரடைஸ் சார்பில் கி.ஸி. சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப் படம் குறித்து தயாரிப்பாளர் கி.ஸிசீனுராஜ் கூறும்போது,  

“படத்தில் நடித்துள்ள கிஷோர் உள்ளிட்ட அனைவருமே தங்களது நூறு சதவீத பங்களிப்பை தந்துள்ளனர். ‘களத்தூர் கிராமம்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என விரும்பி அவரை சந்தித்தபோது எங்களிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் எனத் தெரியாது. படத்தை எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்' என சொல்லிவிட்டார். 

அவர் சொன்னபடி, படத்தை எடுத்து முடித்து அவரிடம் காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு, பாராட்டியவர், “இது எனக்கான படம், எனக்கான வேலைகள் இதில் நிறைய இருக்கிறது” என உடனே இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார். அவரின் இசையில் இந்தப் படம் புது வடிவம் பெற்றுள்ளது. படத்தை பார்த்துவிட்டு ஒரு மூத்த பத்திரிகையாளர், “இது படம் என்பதையும் தாண்டி, ஒரு வாழ்வியல் பதிவு’ என பாராட்டினார். ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது!” என்றார்.  

வரும் அக்டோர் 6ஆம் தேதி ‘களத்தூர் கிராமம்’ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது! 

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles