‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் பேசப்படும் - நடிகர் சூர்யா

Friday, November 17, 2017

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இதில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி நடித்துள்ளது. படத்தை பி.வினோத் இயக்கியுள்ளார்.

இன்று வெளியாகி உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று திரையிட்டது படக்குழு. பிரபலங்கள் பலர் பங்கேற்று, படத்தைப் பார்த்து ரசித்தனர். 

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் குறித்து சூர்யா பேசும்போது,

“ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகள் வாழ்நாளில் காணப்படும் வழக்குகளை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம் நம்மை பிரமிக்க வைக்கும். தமிழ் நாட்டில் 10 வருடமாக கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் ‘சதுரங்க வேட்டை’யில் எப்படி பேசப்பட்டதோ அதே போல் இதிலும் பேசப்படும். 

ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது. சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது. ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம். உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள். திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள்.” என்றார்.  

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles