‘சூர்யவம்சம்’ மாதிரி பாஸிடிவ்வான படம் ‘அண்ணாதுரை’!

Monday, November 27, 2017

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார்  சீனிவாசன். இப்படம் நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா பேசும்போது, 

“வாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும் தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். அதேபோல, யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார். அவர் தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனி தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றவுடன், அவரை  போய் கேட்க சொன்னேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். 

பல உண்மையான மனிதர்கள், கொட்டிய உழைப்பு தான் இந்த ‘அண்ணாதுரை’. விஜய்னு பேர் வச்சாலே பூனை மாதிரி ரொம்ப அமைதியா இருப்பாங்க, அது ஜோசப் விஜயா இருந்தாலும் சரி, விஜய் ஆண்டனியா இருந்தாலும் சரி. இது ‘சூர்யவம்சம்’ மாதிரி ரொம்பவே பாஸிடிவ்வான படம்” என்றார்.

இயக்குநர்கள் கௌரவ், விஜய் சந்தர், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், நாயகிகள் டயானா சம்பிகா, மஹிமா, ஜூவல் மேரி, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர், ஒளிப்பதிவாளர் தில்ராஜ், கலை இயக்குநர் ஆனந்தமணி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles