தமிழில் தாக்குப்பிடிப்பாரா நிவின் பாலி? 

Monday, November 27, 2017

எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். 

“திரைத்துறைக்கு வந்த நாள் முதலே தமிழில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ‘நேரம்’ ஒரு பைலிங்குவல் படம், இது தான் என் முதல் நேரடி தமிழ்ப் படம். ‘ரிச்சி’ படத்தில் இசையும், சவுண்ட் மிக்ஸிங்கும் சிறப்பாக வந்திருக்கிறது. சிறந்த நடிகர்கள் மற்றும் இந்த படக்குழுவுடன் வேலை செய்தது மிகச்சிறந்த அனுபவம். என் முதல் படம், உங்கள் ஆதரவு தேவை” என்கிறார் நாயகன் நிவின் பாலி.

‘பிரேமம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் ‘ரிச்சி’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் அவர் தாக்குப் பிடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். வரும், டிசம்பர் 8 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles