ரகுமான் - குருசோமசுந்தரம் இணையும் 'கதாயுதம்'!

Thursday, November 16, 2017

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரம்மி’. இந்தப் படத்தை பாலகிருஷ்ணன்.கே இயக்கியிருந்தார். தற்போது அவர், தனது அடுத்தப் படத்திற்கு ‘கதாயுதம்’ என பெயரிட்டுள்ளார்.

படத்தை, ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ‘ரம்மி’ படத்துக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.                                                                                      

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கிற  இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது!” என்றார்.

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக   கவனிக்கப் பட்டவர் குரு சோமசுந்தரம்.  ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக ‘இந்தியா -பாகிஸ்தான்’ படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், துளசி, ரமா, பாரதி கண்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles