கொண்டாட்டத்துக்கு தயாராகிறது ‘வேலைக்காரன்’ படக்குழு!

Thursday, November 16, 2017

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் மோகன் ராஜா. படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராம்ஜியின் ஒளிப்பதிவில், ரூபனின் படத்தொகுப்பில், முத்துராஜின் கலை இயக்கத்தில் 'வேலைக்காரன்' உருவாகியுள்ளது.

படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத்தின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் 'இறைவா' சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. யு டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டி மேலும் பலமாக கலக்கிக்கொண்டு வருகிறது. வெகு சில பாடல்களே இந்த சாதனையை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றது. ஷூட்டிங் சிறப்பாக நிறைவடைந்ததை 'வேலைக்காரன்' படக்குழுவினர் நாளை (நவம்பர் 17) கொண்டாட உள்ளனர்.  

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles