காதலர்களின் சங்கேத வார்த்தை 143!

Friday, November 10, 2017

Eye Talkies  என்ற பட நிறுவனம் சார்பில் சதீஷ் சந்திரா பாலேட் தயாரித்துள்ள படம் ‘143’. இப்படத்தின் கதையை எழுதி, இயக்குவதோடு நாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷி.

அவருக்கு ஜோடிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா நடித்துள்ளனர். மேலும், விஜயகுமார், கே.ஆர்.விஜயா, சுதா, ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா, மோனா, முண்டாசுப்பட்டி பசுபதி  உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இன்று, இப்படம் வெளியாகி உள்ளது. 

படத்தைப் பற்றி இயக்குநர் ரிஷி பேசும்போது,

“காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் கலந்த ஒரு கலவைதான்  ‘143’. காதல் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு தனி ரசனை இருக்கும். அப்படி ரசிக்கும் படியான காதல் கதை தான் இது. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார். அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கு பிடிக்கும். அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக் (ரிஷி),  பௌர்னமி அன்று பிறந்த நாயகி மது (பிரியங்கா ஷர்மா) இவர்கள் காதலுக்கு வில்லனாக வருகிறார் சூரியன் (ராஜசிம்மன்). இந்த மூன்று கதாபாத்திரங்களின் இடையேயான ஓட்டமே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. ‘143’ பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles