''வெண்ணிலா கபடிக் குழு 2'' நாயகன் நானேதான் - நடிகர் விக்ராந்த் 

Friday, November 10, 2017

தமிழ் சினிமாவில் சிலருக்கு மட்டும் டேக் ஆஃப் ஆவதில் ஏனோ சிரமம் இருக்கும். ஆனால், விடாமுயற்சியும் தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால் ஒரு நாள் வெற்றி, அவர்களது தோளில் மாலையாக விழும். இப்போது, அந்த மாலை விக்ராந்தின் கழுத்தில் விழுந்திருக்கிறது.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்து, சுசீந்திரன் இயக்க உள்ள படத்திலும் அவருக்கு யோகம் அடித்திருக்கிறது!

இப்படத்தில் நடித்தது பற்றி விக்ராந்த் கூறும்போது, 

“தமிழ் சினிமாவில் ‘பாண்டிய நாடு’ படத்திற்கு பிறகு, எனக்கு நடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடித்ததில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்பூர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரன்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்க சொன்னாலும் நான் நடிக்கத் தயார். இந்தப் படத்தில் எல்லோரும் குழுவாக இல்லாமல், நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து பணியாற்றினோம். அதன் வெளிப்பாடு திரையில் தெரியும். நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன் இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரம்பித்துள்ளேன். இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது. 

சுசீந்திரன் சார் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே சொன்னார். “அடுத்து ‘வெண்ணிலா கபடி குழு-2’ பண்ணுகிறோம். முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார். அவருக்கு பதில் நீ. மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான். படத்தை செல்வசேகரன்  இயக்குகிறார்” என்றார். அந்தப் படத்துக்காக கபடி முறையாக கற்று வருகிறேன். இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படம் வெளியாகும்.” என்றார்.  

இனி விக்ராந்துக்கு ஏறுமுகம் தான்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles