ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய நடிகர் விக்ரம்! 

Tuesday, November 7, 2017

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதா&மனுரஞ்சித் திருமணம் அண்மையில்  நடந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். ரசிகர்கள் அனைவரும் மேடையேறி, விக்ரமின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

பொதுவாக, சினிமா நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை திருணம வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் வாய்ப்பு, அளிக்கப்படும். ஆனால் நடிகர் விக்ரம், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. மேலும், தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, பலத்த ஆரவாரங்களுக்கிடையே “ஓ பட்டர்ஃப்ளை” பாடலை பாடினார் நடிகர் விக்ரம். 

“கோலிவுட்டில் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களை வரவழைத்து, கௌரவித்ததன் மூலம், சொந்த வாழ்க்கையிலும் விக்ரம் தனித்தன்மையுடைய மனிதநேய பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார்” என்று தங்களது இணையப் பக்கத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்க கலக்குங்க சீயான்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles