படதுவக்கவிழாவை பயனளிக்கும் நிகழ்வாக மாற்றிய நடிகர் ஆரி!

Tuesday, November 7, 2017

வலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜசேகர்.ஷி தயாரிக்கும் படம் ‘மௌனவலை’. படத்தில் நாயகனாக ஆரியும், நாயகியாக ஸ்மிருதியும் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

வழக்கமாக நடைபெறும் பட பூஜை போல் இல்லாமல் ‘மௌனவலை’ தனித்துவமாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமைந்தது. 

விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வழக்கமான உணவு வழங்கப்படாமல் ஆர்கானிக் உணவு வழங்கப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு ஏற்றவாறு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்ககூடிய உணவு அளிக்கப்பட்டது அதன் பின்னர் அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக சில்வர் டம்பளர் தரப்பட்டது. நடிகர் ஆரி தன்னுடைய ‘மாறுவோம் மாற்றுவோம்’ அமைப்பின் மூலம் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு பற்றியும், விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இதை செய்திருந்தார். இறுதியாக நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அமைப்பு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர்  “பிளாஸ்டிக்கை நாம் ஏன் ஒழிக்க வேண்டும், அதற்கு மாற்றாக என்னவெல்லாம் பயன்படுத்தலாம்” என்பது பற்றி நடிகர் ஆரி, விளக்கி பேசினார். 

‘மௌனவலை’ த்ரில்லர் படமாக இருந்தாலும். திரைப்படத்தின் துவக்க விழா அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது, அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles