ஆணவக் கொலைகளை எதிர்க்கும் ’விழித்திரு’ - தமிழ் உணர்வாளர்களை ஈர்க்கும்! - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்

Thursday, November 2, 2017

தமிழ் சினிமாவில் 'அவள் பெயர் தமிழரசி' மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவனின் அடுத்தப் படைப்பு 'விழித்திரு'. பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இப்படம்,  நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் படம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

“இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் அரியப் படைப்பான ‘விழித்திரு’ படத்தை அண்மையில் பார்த்தேன். இந்தப்படம் மாணவர்களையும் இளைஞர்களையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் நடைபெறுகிற கௌரவக் கொலை என்னும் ஆணவக் கொலைகளை எதிர்க்கிற வகையில் இந்த திரைப்படத்தின் மையக்கருத்து அமைந்திருக்கிறது. 

இயக்குநர் மீரா கதிரவன் சிறந்த தமிழ் தேசிய உணர்வாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் தெரியப்படுத்திருக்கிறார். படத்தில் நாயகனுக்கு முத்துக்குமார் என பெயர் சூட்டியுள்ளார். ஒரு இல்லத்துக்கு திலீபன் இல்லம் என பெயர் சூட்டியிருக்கிறார். இப்படம் தமிழ் உணர்வாளர்களை ஈர்க்கும்!. 

இந்தப் படத்தின் மூலம் மிகச் சிறந்த இயக்குநர் என்பதை நிலைநாட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் அவர்கள் . அவர் மென்மேலும் பல வெற்றிப் படங்களை வழங்கவேண்டும். அவருக்கு தமிழ்ச் சமூகம் குறிப்பாக இளைஞர்கள் பேராதரவு வழங்கவேண்டும். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்துக்கு பிறகு ‘விழித்திரு’ என்ற  இரண்டாவது படைப்பை மிகச் சிறப்பான முறையிலே இயக்கியிருக்கிற அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் சமூகம் அவரை ஏற்கவேண்டும் போற்றவேண்டும் அவருக்கு உற்றத்துணையாய் நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles