‘எவனும் புத்தனில்லை’ படத்துக்காக 200 நடனக் கலைஞர்களுடன் ஆடிய பிக்பாஸ் சினேகன்!       

Wednesday, November 1, 2017

வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’.  இந்தப் படத்தில் நபிநந்தி நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள்.

 ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மேலும், சங்கிலி முருகன், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார், ரி.ஜி.ஷி.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, ஜிபிஸி. ராகா மாறன், அற்புதன் விஜய், ஜோதி, தர்ஷினி, எலிசபெத் உள்ளிட்டோரும் உடன் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் ‘பிக்பாஸ்’ சினேகன் நடிக்கிறார். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் விஜயசேகரன்.     

இப்படம் குறித்து அவர் பேசும்போது, 

“உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால், மனித இனத்தில்  இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடுகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் அட்டூழியங்கள் செய்கிறார்கள். இதற்கு எதிராக ஆறாயிரம் அடி உயர மலைக் கிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் ஒருவன், மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து  நடத்தும் யுத்தமே ‘எவனும் புத்தனில்லை’. 

இந்தப் படத்திற்காக பிக்பாஸ் சினேகன் எழுதி, அவரே ஆடிய, “எதுவும் தப்பில்லை.. எவனும் புத்தனில்லை..” என்ற பாடல் காட்சி  மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது. . இப்பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். இது இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்டதாகும்!” என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles