அர்ஜுன் 150!

Monday, March 27, 2017

பாஸியன் ஸ்டூடியோஸ் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நிபுணன்'. இப்படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி, வைபவ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருப்பவர் அருண் வைத்தியநாதன். பிரசன்னா ஹீரோவாக நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மோகன்லாலின் பெருச்சாளி படங்களை இயக்கியவர் இவர். 

நிபுணன் பற்றி இவர் பேசியபோது, 

"ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று எண்ணியே, 'நிபுணன்' படத்தின் தலைப்புக்கு என்றே டீசரை வெளியிட்டோம். இந்த டீசர் மூலம், எங்கள் படக்குழுவினரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசர் முழுவதும், 'நிபுணன்' படத்தின் பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருப்பது இதன் தனி சிறப்பு. எங்களின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருவதில் சந்தோஷம். 

'நிபுணன்' படத்தின் கதையில் புதிய யுக்தியைக் கையாண்டு உள்ளோம்; அதே யுக்தியை எங்கள் விளம்பரங்களிலும் கையாள்கிறோம். வருகின்ற கோடை காலத்தில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார். 

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவரது 150வது படம் நிபுணன் என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles