இயற்கை மீதான காதலை இரட்டிப்பாக்கும் வனமகன்!

Friday, March 24, 2017

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு இயக்குநர்களின் வருகை என்பது தற்போது அதிகமாகவே உள்ளது. விரல்விட்டு எண்ணவே முடியாத அளவுக்கு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சிறந்த இயக்குநர்கள் என முதல் அறிமுகத்திலேயே பலர் அடையாளம் காணப்பட்டாலும், அடுத்தடுத்து அந்தப் பெயரை தக்க வைத்துக்கொள்வது பெரும்பாடாகவே இருக்கிறது.

முதல் படம் மட்டுமல்லாமல், தொடர்ந்து தான் இயக்கும் படங்களில் முத்திரை பதிக்கும் இயக்குநர்கள் ஒரு சிலர் உண்டு. அதில் குறிப்பிடத்தகுந்தவர் இயக்குநர் விஜய். 

பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என தன்னுடைய கவித்துமான டைரக்ஷனால் பிரித்து மேயும் இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் பாடம் கற்றவர். எனவேதான், மாறுபட்ட கதை சொல்லல் முறைகளையும் புதிய கதைக்களன்களையும் எடுத்துக்கொண்டு கோலிவுட்டில் வெற்றிவாகை சூடி வருகிறார் விஜய். அந்த வரிசையில் அடர்ந்த வனப்பகுதியை மையமாகக் கொண்டு, அவர் இயக்கியுள்ள படம் 'வனமகன்'.  இந்தப் படத்தில் ஜெயம் ரவி - சாயீஷா முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படம் குறித்து இயக்குநர் விஜய் பேசும்போது,    
"இயற்கையை விரும்பி நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், எங்கள் 'வனமகன்' படக்குழுவினரின் சார்பில் சர்வதேச வனநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இயற்கையின் கொடையான வனப்பகுதிக்கு சாந்தமான முகமும் இருக்கின்றது, அதே சமயத்தில் ஆக்ரோஷமான முகமும் இருக்கின்றது. அந்த இரண்டு முகங்களும் தான் வனப்பகுதியைப் பாதுகாக்கும் இந்தப் படத்தின் இரண்டு சிறந்த குணாதியசங்கள். இயற்கை மீது மக்கள் வைத்திருக்கும் காதலை 'வனமகன்' திரைப்படம் நிச்சயமாக இரட்டிப்பாக்கும்" என்றார். படத்தின் பர்ஸ்ட் லுக்கே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பதால், மக்களின் எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கியிருகிறான் வனமகன். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles