ஒரே அறையில் நடக்கும் கதை 'தாயம்'! - தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் 

Tuesday, March 21, 2017

'பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்' சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ள படம் 'தாயம்'. இப்படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், புதுமுகம் ஐரா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் பேசும்போது, 

"இதுவரை எவரும் கண்டிராத புத்தம் புதிய கதைக்களத்தை கொண்டு தான்  தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்க வேண்டும்  என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருந்தோம். அப்படி பல தரமான நல்ல கதைகளில் இருந்து, மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் 'தாயம்'. இயக்குநர் கண்ணன் ரங்கசாமியின் கதை மீது எங்களுக்கு  உறுதியான நம்பிக்கை இருக்கின்றது. ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் 'தாயம்' திரைப்படம், நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை தரும்" என்றார் .

முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகியுள்ள 'தாயம்' படம், மார்ச் 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles