காதல் காட்சிகளில் பதற்றமானேன்! - நடிகர் சிபிராஜ்

Friday, March 17, 2017

'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டெய்ன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ் மற்றும் லலித் ஆகியோர் தயாரித்துள்ள படம் 'கட்டப்பாவ காணோம்'. சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கிறார் மணி சேயோன். இவர், இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப்படத்தில் கட்டப்பாவாக ஒரு மீன் இடம்பிடித்திருக்கிறது. 

இப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் சிபிராஜ் பேசும்போது, 

"நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன் நடித்தது நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம். ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். எனவே நாங்கள் பலமுறை 'ரீ டேக்' எடுக்க வேண்டியதாகிப் போய்விட்டது.

 

நான் நடித்த முந்தைய படங்களை விட,  'கட்டப்பாவ காணோம்' படத்தில் எனக்குக் காதல் காட்சிகள் அதிகமாகவே இருக்கின்றது. இதனால், ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷின் சகஜமாகப் பழகக்கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்துவிட்டது. சித்ரா லட்சுமணன் சார், லிவிங்ஸ்டன் சார் போன்ற மூத்த கலைஞர்கள், காளி வெங்கட், யோகி பாபு போன்ற புதிய கலைஞர்கள் மற்றும் பேபி மோனிகா என எல்லா தலைமுறை கலைஞர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை இந்தப் படம் பெற்றுத் தந்திருக்கிறது. நிச்சயமாக, இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்" என்றார்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles